நாட்டில், மேலும் 578 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 98 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 578 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றாளர்கள் அனைவரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை, சுகாதார மேம்பாட்டு பணியகம், வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில், மேலும் 121 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 93 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களைத் தவிர்த்து, தற்பொழுது, 3 ஆயிரத்து 752 தொற்றாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!