புத்தளம் மணல்தீவு பகுதியில் அரிய வகை ஆந்தை மீட்பு

புத்தளம் மணல்தீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் அரிய வகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

ஆந்தை மரத்திலிருந்து கீழே வீழ்ந்த நிலையில் அதனை அவதானித்த நபரொருவர் குறித்த ஆந்தையை மீட்டு வைத்திருந்த நிலையில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆந்தையை மீட்டு காயங்களுக்குள்ளான ஆந்தையை சிகிச்சையளிப்பதற்காக குருணாகல் நிக்கவெரெட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!