திருகோணமலை-மொரவௌ பகுதியில் சில்லறை கடையொன்று தீக்கிரை

திருகோணமலை-மொரவௌ எட்டாம் வாய்க்கால் பகுதியில் சில்லறை கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற கணவர் கடைக்கு தீ வைத்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சில்லறை கடையின் அனைத்து பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனாலும் மதுபோதையில் கடைக்கு தீ வைத்த கணவர் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு வந்து சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடைக்கு தீ வைக்கப்பட்டமையினால் முப்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!