கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் பொலிஸாரால் காரொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் ஆளின்றி காரொன்று நிற்பதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

காரிலிருந்து சில பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த கார், வலப்பனையிலிருந்து திருப்பட்டு பளை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!