மதுபானசாலையில் நிரம்பி வழிந்த மதுப்பிரியர்கள்

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபானசாலை மூடப்படும் என மதுவரித்திணைக்களம் அறிவித்த நிலையில் நேற்;றைய தினம் மதுபானசாலையில் குடிமக்கள் நிரம்பிவழிந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவான மதுபானசாலைகளில் நேற்று மாலையில் கூட்டம் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் எந்தவித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாத நிலையில் மதுபானசாலைகளில் குடிமக்கள் மதுபானங்களை வாங்குவதற்கு முண்டியடித்ததை காணமுடிந்தது.

களுவாஞ்சிகுடி நகரில் உள்ள இரண்டு மதுபானசாலைகளிலும் பெருளவானோர் கூடியதனால் வீதியில் போக்குவரத்து செய்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக மதுபானசாலைகளில் கடுமையான நெரிசல்கள் காணப்பட்டதன் காரணமாக சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சநிலை
எற்பட்டது.

13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவித்துள்ளதன் காரணமாக நேற்றைய தினம் பெருமளவானோர் மதுபானசாலைக்கு படையெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!