கிளிநொச்சியில் கஞ்சா கடத்த முற்பட்ட நபரொருவர் கைது

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக பேருந்து ஒன்றில் கஞ்சா கடத்த முற்பட்டதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து ஒரு கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்திலேயே வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பேருந்து நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!