டிரம்ப் நேர்மையானவர் அல்ல-வெளியானது கருத்துக்கணிப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர், வலுவான தலைவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.

34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி இருக்கிறார்கள்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!