போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டோர் கைது

மட்டக்களப்பு – எறாவூர்ப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் வியாபாரத்திற்குப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து ஒரு தொகுதி போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர், போதைப் பொருள் வியாபாரியைப் போல நடித்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுவிட்டு அறுபதாயிரம் ரூபா பணத்துடன் குறித்த வீட்டிற்குச் சென்றவேளை போதை மருந்தினை கைமாற்றிய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பெண்ணின் மூத்த சகோதரி போதைப் பொருள் குற்றச்சாட்டின்பேரில் ஏறடகனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை ஹெரோயின் பக்கற்றுக்ளுடன் மதகு ஒன்றின்மீது அமர்ந்திருந்த மூன்றுபேரை பொலிஸார் கைது செய்யதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர்ப் பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எச்எம்.ஷியாம் தலைமையிலான குழுவினர் ஏறாவூர்ப் பொலிஸ் பிரதேசத்தில் போதைத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!