மட்டக்களப்பில், பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு, இயலளவு விருத்தி செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில், அரச திணைக்களம் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றும், பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான, இயலளவு விருத்தி தொடர்பான, ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வுக்கு, பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பங்கேற்றார்.

செயலமர்வில், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள் அடங்கலாக, மேலும் பல பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி இ.மோகன், மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், செயலமர்வு வளவாளராக, ‘வற் சோல்’ நிறுவன வளவாளர் விக்னராஜ் மனோகரராஜா பங்கேற்று, கருத்துரைகளை வழங்கினார்.

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!