ஈஸ்டர் தாக்குதல்!! : நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தங்களுக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்றுத் தருமாறு கோரி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அவர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற தவறியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!