முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப் பகுதியில் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் தனியார் கல்வி நிலையம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகரதாலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
10 ஆம் வட்டாரத்தில் நீண்டகாலமாக மாணவர்களுக்கான தனியார் கல்வி நிலையம் இல்லாத நிலையில் புலம் பெயர் உறவுகளான வசந்த், அதிசா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் கல்வி நிலையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.விநோநோகராதலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜயந் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்;டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் சிறப்புற நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கட்டத்தினை கட்டி அமைத்த கட்ட தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.