வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு அற்புத ஐயனார் ஆலயத்தில் மணவாளக்கோல விஞ்ஞாபனம் நடைபெற்றது.
ஆலயத்தின் முதன்மை குருக்களான சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக் குருக்களின் ஆசியுடன், நடராஜ மதனகோபால சிவாச்சாரியார் மற்றும் நாகேந்திர சனாதனசர்மாவின் வழிநடாத்தலில் விசேட பூஜை நிகழ்வுகள் ஆரம்பமாகி, சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம்வந்ததுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஆலய நிர்வாகத் தலைவர் ப.உமாபதி, செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் க.இரங்கநாதன் மற்றும் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.