வவுனியாவில் விபத்து: இருவர் படுகாயம்!!

வவுனியா குருமண்காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்தார் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய என் பி கியூ யூ 9554 என்ற இலக்கமுடைய நீல நிற முச்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் விபத்தை ஏற்படுத்திய சாரதியை தேடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!