ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், எட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கனரக வாகனமும் நேர்க்கு நேர் மோதியே விபத்து சம்பவித்தள்ளது.

விபத்தில் மோட்டர் சைக்களின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த அதிர்ஷ்டநாதன் கோபிநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை அடுத்து கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள கித்துல்கல பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!