பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிராந்திய சுகாதாரப் பணிமனைகளினால் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரகின்றன.

இதற்கமைய மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் தொடர்ச்சியாக சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ். யோகேஸ்வரனின் ஒழுங்கமைப்பில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏதிர்வரும் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு அதிகளவிலான மக்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் காலாவதியான பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொது மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இதனையடுத்து பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டனர்.

இச் சுற்றிவளைப்புக்களில் மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான கே.இளங்கோவன், எஸ்.சிவசுதன், எஸ்.ஜீவிதன், வி.கணேசன் ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!