தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் ஜனன தினம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வநாயகத்தின் 123ஆவது ஜனன தின நிகழ்வு வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்பட்டது.

தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வுகள்,மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு
முன்பாக இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவருமான பொன்.செல்வராஜா, முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், கட்சி மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் சிறப்புரையாற்றியிருந்தார்.

வவுனியாவில் தந்தைசெல்வாவின் 123வது ஜனனதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியிலும இடம்பெற்றது.

தமிழரசுகட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா, திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், அதன்பின்னர் ஏனையவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!