ஜெனிவாத் தீர்மானம் : கனடா திருப்தி!

‘பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டம் குறித்த தகவல்கள் ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்து பாதுகாக்குமாறு மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்கு ஆணை வழங்கியுள்ளதன் மூலம் புதிய தீர்மானம் இலங்கையில் பொறுப்புக்கூறலை மேலும் முன்னோக்கி நகர்த்துகின்றது என கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கானே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்குமான தொடர்ச்சியான ஆதரவை தீர்மானம் வெளிப்படுத்துகின்றது. இணைத் தலைமை நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து கனடா செயற்பட்டது. எதிர்கால மனித உரிமை மீறல்களை தடுப்பதிலும் கடந்தகால மீறல்களிற்கு தீர்வை காண்பதிலும் மனித உரிமை பேரவை முக்கிய பங்காற்றுகின்றது. இந்த ஆணை எதிர்கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிற்கு மிகவும் முக்கியமானது. தொடர்ச்சியான அறிக்கையிடலும் மனித உரிமை பேரவையின் கவனம் செலுத்தப்படுதலும் இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறலை கண்காணிப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!