மனித உரிமைகள் பேரவை விடயத்தை, அரசாங்கத்தினால், சரியான முறையில் கையாள முடியவில்லை என, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பல உயிர்களை காவுகொண்டது.
தாக்குதலை வைத்து நாட்டில் பாரிய இனவாதம் வர்க்க வாதம் ஏற்பட்டு இன்றும் அதன் தொடர்ச்சி நீடித்துள்ளது.
இதற்கு உரம் ஊட்டக்கூடியவர்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்; தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், தாக்குதலை தடுக்க முடியாமல் போனவர்கள் தொடர்பான விடயங்கள் தான் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் தாண்டிய ஒர் முன்னேற்றகர மட்டத்திலான அறிக்கையைத் தான் சகலரும் எதிர்பார்த்தனர்.
இதனால் தான் இதை பூரணமற்ற அறிக்கை என்று கூறுகிறோம்.
இத் தாக்குதலால் ஒரு பக்கம் கத்தோலிக்கர்களும் மறுபக்கம் முஸ்லிம்களுக்குமே பாதிப்புக்கள் ஏற்பட்டன.
இதன் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
முன்னாள் அமைச்சர்கள் பலரின் பெயர்கள் இதனோடு தொடர்புபடுத்தப்பட்டது.
இன்று அவை உன்மையல்ல என்று நிரூபணமாகியுள்ளது.
ரவி செனவிரத்னவின் சாட்சியங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
நோரடியாக வாய் மொழி மூலமாக குறிப்பிடாமல் எழுத்து மூலம் சாட்சியம் வழங்கினார்.
அவரின் அந்த பிரதான சாட்சியங்கள் குறித்து அறிக்கையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இது முக்கியமான சாட்சியம்.
இவை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதைத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும்.
தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனமை தொடர்பான ஒரு பக்க குற்றச்சாட்டுக்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த அரசாங்கம் அவருக்கெதிராக சட்டத்தை செயற்படுத்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
என தெரிவித்தார்.