அரசாங்கம், மீண்டும் அரசியல் நாடகம் : துஷார

தற்போதைய அரசாங்கம், இராஜதந்திர ரீதியில், தோல்வியை சந்தித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பல மீறப்படும் செயற்பாடுகள் இடம்பெறுவதனையே பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து கொள்ள கூடியதாகவுள்ளது.

பேராயரின் கருத்து உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு காரணமான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதில் உள்ள நம்பிக்கையற்ற தன்மையை உணர்த்தும் வகையில் உள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மொத்த அறிக்கையில் ஒரு பாகம் தான் வெளிவந்துள்ளது.

இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது என்ன கூறி ஆட்சிக்கு வந்தது?

தற்போதைய ஜனாதிபதி, தேர்தல் காலங்களில் கர்தினாலை சந்தித்த போது ஆட்சிக்கு வந்து இரண்டு வாரங்களுக்குள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கைது செய்து தண்டிப்பதாகக் கூறினார்.

இன்று ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் கடந்து விட்டது.

புதிதாக என்ன செய்தார்? கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆணைக்குழு அறிக்கையைத் தான் இன்று வெளியிட்டுள்ளனர்.

கர்தினால் எழுப்பும் கேள்விகளுக்கான பதில் தான் எங்களுக்கும் வேண்டும்.

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?

தாக்குதலின் உண்மைத் தேவையுடையவர்கள் யார்?

நிதி உதவி வழங்கியவர்கள் யார்?

உள்ளிட்ட அடிப்படை முக்கிய விடயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உண்மைகளைக் கண்டு கொள்ளும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை.

ஈஸ்டர் தாக்குதலை வைத்து மீண்டும் அரசியல் செய்வதற்கே முனைகின்றனர்.

அதிகார இருப்பை பொரும்பான்மை மக்களிடம் பலப்படுத்தவே முனைகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து நீதியான தீர்வுகள் வெளிவராது என்ற தோற்றப்பாட்டைத் தான் கர்தினால் கூற வருகிறார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளிலும் இந்த அரசாங்கம் பெயில் என்பதை தான் நிரூபித்துள்ளது.

ஜெனீவா விவகாரத்தையும் கையாளத் தெரியாத அரசாங்கம், கார்தினால் ஈஸ்டர் பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றால் எவ்வாறு கையாளும்.

இராஜதந்திர ரீதியாக செயற்பட வேண்டிய விடயங்களை செய்யாமல் விட்டதன் விளைவைத் தான் இந்த அரசாங்கம் சந்தித்து வருகிறது.

கார்தினாலையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் ஏமாற்றி, பான் கீ மூனையும் ஏமாற்றி ஏனைய பல நாடுகளையும் ஏமாற்றி இராஜதந்திர ரீதியாகவும் பெயில் ஆகி ஏமாற்று அரசாங்கமாக மாறியுள்ளது.

என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!