சௌபாக்கியா வாரம் ஆரம்பித்து வைப்பு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கிய வார வேலைத்திட்டத்தின் மாவட்ட நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சௌபாக்கியா வாரத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி, தொற்றா நோய்கள் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கு, சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல், ஆலோகா கடன் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் உடுப்புக்குளம் கிராம சேவகர் பிரிவிலும் சௌபாக்கிய வார வேலைத்திட்டம் இடம்பெற்றது.

இதன்போது சௌபாக்கியா வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல், ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர், கட்டுப்பாட்டுச் சபை தலைவர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!