ஊடக செயலாளர்கள் குழுவினருடன், கெஹலிய சந்திப்பு

ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக பிரஜைகள் அனைவரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்திலும் நடைமுறைக்குப் பொருத்தமான வகையிலும் பத்திரிகை ஸ்தாபனச்சட்டம் அமையவேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் பின்னணியில் ஊடகங்களின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்கும் நோக்கங்கள் எவையுமில்லை என்றும் அத்தகைய அவப்பெயருக்கு உள்ளாகும் அவசியம் தனக்கில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஊடக செயலாளர்கள் குழுவினருடன் நடத்திய கலந்துரையாலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னர் உருவாக்கப்பட்ட பத்திரிகை ஸ்தாபனச்சட்டம், தற்போதைய சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தியமைக்கப்பட வேண்டியுள்ளது.
அண்மைக்காலத்தில் நவீன ஊடகங்கள் உள்ளடங்கலாக பல்வேறு பிரிவுகள் ஊடகத்துறையுடன் இணைந்திருக்கின்றன.

எனவே இந்தச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எவரேனும் எதிர்ப்பு வெளியிடுவார்களெனின், அது பிற்போக்குத்தனமான நிலையையே ஏற்படுத்தும்.

நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் எனக்கு முக்கியமான பொறுப்புக்கள் காணப்படும் அதேவேளை, 21 மில்லியன் பிரஜைகள் சார்பிலும் செய்றபட வேண்டிய கடமை இருக்கின்றது.

இவற்றை தனியொரு பிரிவினரால் முன்னெடுத்துச்செல்ல முடியாது.

அதற்குப் பொருத்தமான கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!