ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தலைமையில் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியை மாவட்டத்தில் புனரமைக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கே.லிங்கராசா மற்றும் மாவட்ட முகாமையாளர் எல்.பிரதாப் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் விசேட கூட்டம் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தலைமையிலான குழுவினர் இன்று காலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் தொடர்ந்து மட்டக்களப்பு தனியார் விடுதியில் கட்சியை புனரமைத்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்ஜீத சமரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.