தமிழ் மொழி தொடர்பில் பாரதப் பிரதமர் மோடி கவலை!

அழகிய மொழியான தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பாரதப் பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.

பாராதப் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

‘உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கனவுகளை நனவாக்க நாம் பிறரை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் செல்ல வேண்டும்.

இன்று தேசிய அறிவியல் தினம். விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் எழுதிய ‘ராமன் விளைவு’ கண்டுபிடிப்பிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி நிறையப் படித்து இந்திய அறிவியலின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!