பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்த இருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவர், கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாரென கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பப் பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த குறித்த நபரின் தொலைபேசியை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அவரது தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட அமைப்பின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாக, கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ‘டிக் டொக்’ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவரும் கைது செய்யப்பட்டுள்ளாhர்.

வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

25 வயதுடைய இளைஞர் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!