நாட்டில், மேலும் 518 பேருக்கு, கொரோனாத் தொற்று உறுதி

நாட்டில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 80 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்; 518 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மேலும் 811 தொற்றாளர்கள் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 75 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

அதனால், குணமடைந்தவர்களைத் தவிர்த்து, தொற்று உறுதியானவர்களில், 4 ஆயிரத்து 957 பேர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், கொரோனா தொற்றுக் காரணமாக, மேலும் 05 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 450 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!