புலிகள் புதைத்த தங்கத்தை தேடும் இராணுவம்-புதுக்குடியிருப்பு

தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றால் விசேட ஸ்கேனர்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டு அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகவிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக அனைவரும் கைது செய்யபட்டிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குழுவினரின் தகவலுக்கு அமைவாக இன்றையத்தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!