ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், ஜெனிவா நகரில், இன்று மாலை ஆரம்பமாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இணையவழி காணொளி ஊடாக இடம்பெறுகின்றது.
இன்று ஆரம்பமான கூட்டத்தொடர், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்றைய முதல் நாள் அமர்வில், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரெஸ் மற்றும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.
இன்று, கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை சார்பில், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, எதிர்வரும் புதன்கிழமை, கொழும்பில் இருந்தவாறு, இணைய வழியில் உரையாற்றவுள்ளார்.