நுவரெலியா நானு ஓயாவில் விபத்து : 13 பேர் படுகாயம்

நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில், பேருந்து விபத்திற்குள்ளானதில், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை பகுதியில் இருந்து, தலவாக்கலை பகுதிக்கு, மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியில், முன்னே சென்ற பவுஸர் ஒன்றுடன் பேருந்து மோதி இழுத்துச் சென்று, மண் மேட்டில் மோதி, சரிந்து விழுந்துள்ளது.

பேருந்தில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன், நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து தடுப்புக் கட்டையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விபத்து சம்பவித்ததாக, பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!