ரஸ்யாவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஸ்யாவில் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பறவை காய்ச்சல் பரவியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
பறவை காய்ச்சல் முதன் முறையாக மனிதர்களுக்கு பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரஸ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் பணியாற்றும் 7 தொழிலாளர்களுக்கு ‘எச்5 என்8’ என்ற புதிய வகை பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த ரஷியாவின் சுகாதார கண்காணிப்பு குழு தலைவர், ‘கோழிப்பண்ணையில் பணியாற்றிய 7 தொழிலாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணுக்களை ஆய்வு செய்ததில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்தது.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் எந்த கடுமையான பாதிப்பும் ஏற்படவில்லை. உலகில் முதன்முறையாக பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது தொடர்பாக உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வைரஸ் பிறழ்வடைய முடியுமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும் என்றும், மனிதரிடம் இருந்து மனிதனுக்கு பரவும் திறனை இன்னும் இந்த வைரஸ் பெறாதபோது, இது உலகம் முழுவதுக்கும் பரவுவதைத் தடுக்க தயாராவதற்கும், போதுமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் காலமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் வைரஸ்களில் வௌ;வேறு வகைகள் உள்ளன. இதில் மிகவும் தொற்று நோயான ‘எச்5 என்8’ பறவைகளுக்கு ஆபத்தானது. இதற்கு முன்பு இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியதாக அறிவிக்கப்படவில்லை. தற்போது ரஷியாவில் மனிதர்களுக்கு பரவியுள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!