முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ தனித்தனியே இரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன- பஸில் ராஜபக்ஷ சந்திப்பு கொழும்பு மகாகமசேகர மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், விமல் வீரவன்ஸவின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜெயசேகர பங்கேற்றிருந்தார்.
இது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு ஷங்கரி -லா ஹோட்டலில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.
எனினும், இந்த இரு சந்திப்புக்களும் கொழும்பு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.