வடக்கில் மேலும் 6 பேருக்குத் தொற்று

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனாத் தொற்று இனங்காணப்பட்ட நிலையில், தொற்றாளர்களில்
ஒருவர் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 6 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்குத் தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில்,
அவர்களில் இருவர் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும், ஒருவர் மல்லாவி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும்
வசிப்பவர்களாவர்.

மல்லாவிப் பகுதியில் தொற்றாளராக இனங்காணப்பட்டவர், கிளிநொச்சி கரைச்சி ஆடைத் தொழிற்சாலையில், பணிபுரியும் நிலையில்,
தொற்றுக்குள்ளானவருடன் முதன் நிலைத் தொடர்பைப் பேணியவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!