130 நாடுகள், ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை : அன்டோனியா குட்டரெஸ்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் உள்ள நாடுகளின் பட்டியலில், சுமார் 130 நாடுகள், ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அவரது தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோகம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,

சுமார் 130 நாடுகள், ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை.

வெறும் 10 நாடுகளுக்கு, சுமார் 75 சதவீதம் கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது நியாயமற்றது.

அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும்.

என வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!