பிறேடே கிண்ணத்தின், வடக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பிறேடே கிண்ணத்தின், வடக்கு மாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு, கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானத்தில், இன்று நடைபெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் பாலிந்த விக்ரமசிங்க, பிரதம அதிதியாக பங்கேற்று, உதைபந்தாட்ட சுற்று போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின், தேசிய இளைஞர் சேவை ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற, பிறேடே கிண்ண சுற்றுப் போட்டியில், 4 அணிகளுக்கான போட்டிகள், கிளிநொச்சியில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதில், உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம், லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம், உதயதாரகை விளையாட்டுக் கழகம், ஸ்டார் ஈகிள் விளையாட்டு கழகம் ஆகிய 4 அணிகள் மோதிக்கொண்டன.

இதன் இறுதிப் போட்டிக்கு, உருத்திரபுரம் விளையாட்டு கழகம் மற்றும் கிளிநொச்சி நகர் ஸ்டார் ஈகிள் விளையாட்டு கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டியில், இரண்டு அணிகளும் எந்த கோல்களையும் பெறாது, சமநிலையில் காணப்பட்டமையால், போட்டி நடுவரின் தீர்மானத்தின்படி, தண்டனை உதை வழங்கப்பட்டது.

இதனால், கிளிநொச்சி நகர் ஸ்டார் ஈகிள் விளையாட்டுக் கழகம், பிறேடே கோப்பையை தனதாக்கிக்கொண்டது.

அதனையடுத்து, வெற்றி பெற்ற ஸ்டார் ஈகிள் விளையாட்டுக் கழகத்திற்கு, வெற்றிக் கிண்ணத்தை, கிளிநொச்சி படை முகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் கொட்டுவக்கொட வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!