வடக்கில், மேலும் 10 பேருக்கு கொரோனா!!

வடக்கு மாகாணத்தில், மேலும் 10 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரி ஒருவர், தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில், 366 பேரின் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் ஒருவருக்கு, கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது.

நெல்லியடி பொதுச் சந்தையில், இன்று, வியாபாரிகளிடம் எழுமாற்றாக மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில், இன்று 442 பேரின் மாதிரிகள், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 9 பேருக்கு, கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.

அவர்களில் 5 பேர், மிருசுவிலில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மன்னார் நானாட்டானில் உள்ள, ஹற்றன் நஷனல் வங்கி உத்தியோகத்தர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய ஒருவரின் குடும்பத்தினருக்கே, இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், தொற்று உறுதியாகியுள்ளது.

அவர், நீர்கொழும்பு ஜா – எல சென்று திரும்பிய நிலையில், அறிகுறிகளுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், அச்சுவேலிச் சந்தையில், கடந்த வாரம், கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வியாபாரி ஒருவரின் மனைவிக்கும், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!