கொட்டகலை சுரங்கப் பாதையினுள், பேருந்துகள் விபத்து!!

நுவரெலியாவில், ஹட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில், கொட்டகலை சுரங்கப் பாதையினுள், தனியார் பயணிகள் பேருந்து, இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

இன்று காலை 10.30 மணியளவில், தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்தின் பின்னால் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை சுரங்கப் பாதையினுள், தனியார் பேருந்து சென்று கொண்டிருக்கையில், ஹட்டன் பகுதியில் இருந்து, கார் ஒன்று தலவாக்கலையை நோக்கி சென்றுள்ளது.

இதன்போது, காரின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், காரை முந்தி செல்ல முற்பட்ட நிலையில், தனியார் பேருந்தின் சாரதி உடனடியாக தடையை மிதித்து, பேருந்தை நிறுத்திய போது, பின்னால் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கட்டுப்பாட்டை மீறி, தனியார் பேருந்தின் பின் பக்கம் மோதியது.

விபத்தில், பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும், பேருந்து சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், சாரதிகள், சுரக்கப் பாதையினுள் வாகனங்களை முந்திச் செல்வதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!