இந்தியாவின் மும்பை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

இந்தியாவின் மும்பை குர்லா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல குர்லா ரயில் நிலையத்தில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கிடந்துள்ளன.

அதை மீட்ட பொலிசார் அது வெடி பொருள் என்பதை உறுதி செய்தனர். சக்திவாய்ந்து ஜெல்லட்டின் குச்சிகள், வெடி மருந்துகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்தியாவில் தற்போது புதிதாக ஆட்சியமைத்திருக்கும் பாரதிய ஜனதா அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நாங்கள் யார் என்பதை விரைவில் காண்பிப்போம் என்ற வாசகம் அடங்கிய துண்டு காகிதமும் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் மும்பை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

error: Content is protected !!