திருநீற்றுப்புதன் திருப்பலி ஒப்புக்கொடுப்பு.

கிறிஸ்தவர்களின் திருநீற்றுப்புதன் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புண்ணிய தவக்காலம் ஆரம்பமாகிறது.
இத் தவக்காலமானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி பெரிய வெள்ளி தினம் வரை அனுஸ்டிக்கப்படும்.
ஏப்ரல் மாதம் 02 திகதி பெரிய வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்ட நாளாகும். இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றையும் தவக்காலமாக நினைவு கூர்கின்றது. இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் தம்மை ஒறுத்தல்கள், தியாகம், தானம், தர்மம் மற்றும் ஜெபம் வழிபாடுகள் என ஆன்மீக வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

தவக்காலத்தின் ஆரம்ப நாளான இன்று உலக நாடுகளிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும்விசேட திருப்பலி நடாத்தப்பட்டு எரிக்கப்பட்ட குருத்தோலை சாம்பலை திருநூறாக பூசுகின்ற திருநீற்றுப்புதன் தினத்தை கிறிஸ்தவர்கள் நினைவு கூறுகின்றனர். இந்நாளை அனுஷ்டிக்கும் வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ் அடிகளாருடன், உதவி பங்குத்தந்தை இணைந்து விசேட திருநீற்றுப்புதன் சடங்கு திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர். இந்த விசேட திருப்பலியில் கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!