தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்-வினாயகமூர்த்தி

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த பின்னர் நாட்டில் குண்டு தாக்குதல் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வேறு வேறு விடயங்களில் அவதானத்தை செலுத்தினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவிலை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!