அனுமதி இல்லா ஆயுர்வேத வைத்தியசாலை : வைத்தியர் கைது

ஆயர் வேத தினைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளாது, நுவரெலியா ஹட்டனில் ஆயர் வேத வைத்தியசாலை ஒன்றை நடாத்திவந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் ஆயர்வேத வைத்தியசாலையை நடாத்தி வந்த வைத்தியரை ஹட்டன் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நிலையதிற்கு சென்ற ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர்கள் விசாரனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த ஆயர் வேத வைதத்திய நிலையமானது ஹட்டன் பகுதியில் இதற்கு முன்பு குறித்த நிலையத்தை நடாத்தி வந்த வைத்தியர் ஒருவரால் பெறபட்ட அனுமதியடன் முன்னெடுத்து வந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர் ஹட்டன் டிக்கோயா நகரசபையால் அனுமதி பெறாது இந்த வைத்திய நிலையத்தை நடாத்தி சென்றுள்ளதாக ஹட்டன் பொது சுகாதார பரீசொதகரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யபட்ட ஆயுர்வேத வைத்தியர் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

குறித்த வைத்திய நிலையத்தில் ஆயுர்வேத மருந்துவகைகள் மற்றும் உபகரணங்கள் என்பனவற்றை பயன்படுத்தி குறித்த நிலையம் நடாத்தபட்டு வந்துள்ளது.

உபகரணங்கள் அனைத்தும் ஹட்டன் பொலிஸாரால் மீட்கபட்டுள்ளதுடன், கைது செய்யபட்ட வைத்தியர் டிக்கோய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!