டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் இராஜினாமா!

ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தலைவர் யோஷிரோ மோரி, இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பெண்கள் தொடர்பில், அவர், பாலியல் ரீதியாக, பரவலாக அவதூறாக முன்வைத்த கருத்துகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சீற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு, 6 மாதங்களுக்கும் குறைவான காலம் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனது பொருத்தமற்ற கருத்துக்கள் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, நான் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய விரும்புகிறேன். என, யோஷிரோ மோரி, இன்று இடம்பெற்ற டோக்கியோ கவுன்சில் கூட்டத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.

யோஷிரோ மோரிக்குப் பதிலாக, ஜப்பான் கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பான் ஒலிம்பிக் மேயருமான சபுரோ கவாபுச்சியை நியமிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

84 வயதான கவாபுச்சி, 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில், ஜப்பானை கால்பந்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஜப்பான், தென் கொரியாவுடன் 2002 பிஃபா உலகக் கிண்ணத்தை இணைந்து நடத்த உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!