ஏப்ரல் 21 தாக்குதலில் சந்தேகம் – தயாசிறி

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், எந்த நாட்டையும் குறைகூறும் எந்த தகவலும் தன்னிடம் இல்லை எனவும், ஆனால் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவை குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாhராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று, தற்கொலை குண்டுத் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த தற்கொலை தாக்குதல்களில் வெளிநாட்டு சக்தி ஒன்று சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடிக்காததால் இந்த சந்தேகம் எழுந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பினார்.
இருப்பினும் தன்னிடம் அத்தகைய விடயம் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை எனவும், அது ஒரு சந்தேகம் மட்டுமே என்றும், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெளிவுபடுத்தினார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!