யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு மக்கள், தமக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, இன்று உடுவில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.
பல வருடங்களாக வீட்டுத்திட்டம் வழங்கப்படும் எனக்கூறியும், தமக்கு வீடுகளை வழங்குவதற்கான எவ்வித நடவடிக்கையும், அதிகாரிகளால் முன்னெடுக்கப்படவில்லை எனவும், சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 38 குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், மக்கள் குறிப்பிட்டனர்.
மேலும் தமக்கு அடுத்த மழை காலத்துக்கு முன் வீடு கிடைக்கவில்லை என்;றால் தமது போராட்டம் வலுப்பெறும் என்றும், தாம் போராட்டத்தின் மூலம் உயிரை விடவும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இன்று பிரதேச செயலாளரை சந்தித்த மக்கள், தமது நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.(சி)