இராணுவ மயமாக்கலை நோக்கி நாடு : தலதா அத்துகோரள

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவ மயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்துறை அமைச்சு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது.

அத்தோடு கிராம சேவகர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருவது இதுவே முதல் முறை.
25 மாவட்டங்களுக்கும் பாதுகாப்பை மேற்பார்வையிட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர் பிரிவுகளுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இதேவேளை கொரோனா தொற்றினால் 1.1 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளும் 20 ஆயிரம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள உக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்தும் எச்சரிக்கை விடுக்கின்றோம்;.

அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

நிதிப் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையினால் தங்கள் சொந்த பாரம்பரிய இடங்களை பார்வையிட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!