திருகோணமலையில் திறக்கப்பட்ட தேசிய உணவகம்

திருகோணமலையில், பாரம்பரிய உணவு முறைகளைக் கொண்ட, தேசிய உணவு விற்பனை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பேராதனை விவசாயத் திணைக்களமும், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களமும் ஒன்றிணைந்து அமைத்துள்ள, விவசாய திணைக்களத்தின் தேசிய உணவு விற்பனை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனர் சான் விஜயலால் டி சில்வா, உணவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
பிரதி விவசாய பணிப்பாளர் ஆ.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபய குணவர்த்தன மற்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.வீரகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்குடனும், பாரம்பரிய உணவு முறைகளை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கடப்பாடுடனும், வைத்தியர்களின் ஆலோசனைக்கு ஏற்ற, தரக்கட்டுப்பாடுடைய உணவுகளை இந்த தேசிய உணவு விற்பனை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!