ரிப்கான் பதியூதீன் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான இரசாயன பரிசோதகரின் அறிக்கை கிடைப்பு.

போலி காணி உறுதிகளை தயாரித்து தலைமன்னாரில் காணி ஒன்றை விற்பனை செய்ய முற்பட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான இரசாயன பரிசோதகரின் அறிக்கை கிடைத்துள்ளன என கொழும்பு பிரதான நீதிவான் மொஹமட் மிஹார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் மே 6 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னாரில் 80 ஏக்கர் காணியை போலி உறுதி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!