விமான நிலையங்கள் மீளத் திறப்பு!

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள், சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் விமானம் ஓமானில் இருந்து வந்துள்ளது.

ஓமானில் இருந்து வணிக விமானம் இன்று காலை 07.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்த விமானத்தின் மூலம் சுமார் 50 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்பதுடன், அவர்கள் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வணிக விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளமையினால், பயணிகள் மீண்டும் சாதாரண விமான கட்டணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொரோனா அச்சம் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்ட காலகட்டத்தில் சிறப்பு விமானங்கள் மட்டுமே செயற்பட்டு வந்தன. அவற்றில் விமானக் கட்டணங்கள் மிக அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!