முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் பெறுமதியான புத்தர் சிலையினை வியாபாரத்திற்காக விற்கமுற்பட்ட ஹட்டனை சேர்ந்த மூவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.
தென்பகுதியினை சேர்ந்த குறித்த நபர்கள் முகப்புத்தகம் ஊடாக 06 கிலோ வெண்கல புத்தர் சிலையினை பவுண் சிலை என விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்து முல்லைத்தீவிற்கு கொண்டு சென்று விற்பனைக்கு முயன்றவேளை சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொhலீசாரிடம் ஒப்படைக்கப்ட்டுள்ளனர்.
ஹட்டன் பகுதியை சேர்ந்த வாகனமும் அதன் சாரதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பிலான சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.