மன்னாரில், மேலும் 18 பேருக்கு கொரோனா!

மன்னார் மாவட்டத்தில், மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் எனவும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மாதிரிகள் பெறப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தனர் என்ற அடிப்படையில், சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை மருத்துவ விடுதியில், கொவிட் -19 நோயாளிகள் இருவர், கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த விடுதியில் பணியாற்றிய மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என பலர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும், சுகாதார ஊழியர்கள் இருவரும் என, 4 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 4 பேருக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!