அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைமீது இன்றும் (10) நாளையும் (11) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. .

பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, பெரும்பான்மை பலத்தை கொண்டிராத ஐதேக அரசாங்கம், கவிழுமா- காப்பாற்றப்படுமா என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!