பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் தொற்று நீக்கம்!!

முன்பள்ளி, ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு, கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அமைச்சு தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, இராஜாங்க அமைச்சருடைய தளபாடங்கள் உள்ளடங்கலாக, அமைச்சின் அனைத்து பகுதிகளுக்கும்;, தொற்று நீக்கி திரவம் விசிறப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் முடிவிலேயே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!